search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 8.10 லட்சம் விலையில் அறிமுகமான நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்
    X

    ரூ. 8.10 லட்சம் விலையில் அறிமுகமான நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்

    • டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது.
    • நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு செப்டம்பர் 4-ம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். நெக்சான் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் என்று துவங்குகிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 11 வேரியண்ட்கள் மற்றும் ஆறு வித்தியாசமான நிறங்களிலும் கிடைக்கிறது.

    புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லேம்ப், சீக்வன்ஷூவல் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள், முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் 208mm ஆக இருக்கிறது. காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளது. இத்துடன் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை முழுமையாக கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் இருக்கைகள் (ஓட்டுனர் மற்றும் அவரின் அருகில் இருப்பவைக்கு மட்டும்) வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×