search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாடா நானோ எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்?
    X

    டாடா நானோ எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்?

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேச்பேக் காராக நானோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா நானோவின் எலெக்ட்ரிக் வடிவம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமாக உருவாக்கப்பட்ட கார் டாடா நானோ. இந்திய சந்தையில் டாடா நானோ கார் பல லட்சம் பேரின் கார் வாங்க வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்த பெருமையை கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நானோ கார் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் நானோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் நான்கு சக்கரங்கள் பிரிவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையொட்டி வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா நானோ கார் அந்றுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டாடா நானோ எலெக்ட்ரிக் வெர்ஷன் பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இம்முறை இது பற்றிய விவரங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    டாடா நானோவின் X3 பிளாட்ஃபார்ம் கொண்டு அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மோனோக் சேசிஸ் தற்போதைய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட வேண்டும். சஸ்பென்ஷன் மற்றும் டயர் செட்டப் உள்ளிட்டவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

    இது பற்றிய திட்டத்தில் ஆர்வம் செலுத்தும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தின் சென்னையில் உள்ள ஃபோர்டு மறைமலைநகர் ஆலையை கைப்பற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்படுகிறது. "அனுமானம் மற்றும் எதிர்கால வாகனங்கள் பற்றி டாடா மோட்டார்ஸ் எவ்வித கருத்தையும் டாடா மோட்டார்ஸ் தெரிவிக்காது," என தனியார் செய்தி நிறுவன கேள்விக்கு டாடா நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.

    Next Story
    ×