search icon
என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா வாகன விற்பனையில் மாஸ் காட்டிய ஸ்கார்பியோ!
    X

    மஹிந்திரா வாகன விற்பனையில் மாஸ் காட்டிய ஸ்கார்பியோ!

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்த அல்டுராஸ் G4 எஸ்யுவி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.
    • கடந்த மாதம் இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கார் மாடல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் (நவம்பர் 2022) இந்தியாவில் 61 ஆயிரத்து 140 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 36 ஆயிரத்து 087 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதில் கடந்த மாதம் 51 ஆயிரத்து 181 யூனிட்களை மஹிந்திரா விற்பனை செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 37 ஆயிரத்து 001 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாத விற்பனையை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனம் 4 ஆயிரத்து 605 XUV700 டீசல் யூனி்ட்களை விற்பனை செய்தது. இத்துடன் 1,096 பெட்ரோல் யூனிட்கள் விற்பனை செய்தது. இதே போன்று ஸ்கார்பியோ சீரிஸ் (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N) 4 ஆயிரத்து 181 பெட்ரோல் யூனிட்களும், 2 ஆயிரத்து 274 டீசல் யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மஹிந்திரா தார் மாடலை பொருத்த வரை கடந்த மாதம் 3 ஆயிரத்து 759 டீசல் யூனிட்களும், 228 பெட்ரோல் யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. XUV300 மாடலின் டீசல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன்கள் முறையே 3 ஆயிரத்து 108 மர்றும் 2 ஆயிரத்து 795 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இவை தவிர மஹிந்திரா பொலிரோ மாடலில் 7 ஆயிரத்து 984 யூனிட்களும், மராசோ மாடலில் 201 யூனிட்களும் விற்பனையாகின. கடந்த மாதத்தில் அல்டுராஸ் G4 மற்றும் KUIV100 Nxt பெட்ரோல் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் இரண்டு யூனிட்கள் விற்பனையாகின.

    Next Story
    ×