search icon
என் மலர்tooltip icon

    கார்

    பாதுகாப்பில் நாங்க தான் பெஸ்ட்.. மீண்டும் சொல்லி அடித்த டாடா நெக்சான்
    X

    பாதுகாப்பில் நாங்க தான் பெஸ்ட்.. மீண்டும் சொல்லி அடித்த டாடா நெக்சான்

    • பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்தது.
    • இரு டாடா கார்களை பாதுகாப்பானவை என்று GNCAP அறிவித்து இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நெக்சான் மாடல் குளோபல் என்கேப் என்கிற GNCAP டெஸ்ட்களில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் நெக்சான் தொடர்ந்து பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்சான் வெர்ஷனும், பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பரிசோதனையில் டாடா நெக்சான் மாடல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முறையே 34-க்கு 32.22 புள்ளிகளையும் 49-க்கு 44.52 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது.


    சமீபத்தில் தான் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களை பாதுகாப்பான கார்களாக GNCAP அறிவித்து இருந்தது. தற்போது நெக்சான் மாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆறு ஏர்பேக், ESC, ABS மற்றும் EBD, சீட்பெல்ட் ரிமைன்டர்கள், ISOFX மவுன்ட்கள் ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் பிலைன்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, ஃபாக் லேம்ப் மற்றும் கார்னெரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×