search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 3.99 லட்சம் தான் - முற்றிலும் புதிய ஆல்டோ K10 இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 3.99 லட்சம் தான் - முற்றிலும் புதிய ஆல்டோ K10 இந்தியாவில் அறிமுகம்

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஆல்டோ K10 மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த கார் அதிகளவு மாற்றங்களுடன் புது தோற்றம் பெற்று இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2022 ஆல்டோ K10 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 துவக்க விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் நான்கு வேரியண்ட்கள், ஆறு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான எண்ட்ரி லெவல் மாடலுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஆல்டோ K10 மாடல் முழுக்க முழுக்க புது மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், ஸ்வெப்ட்பேக் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், சிங்கில் பீஸ் கிரில், பிளாக் ஸ்டீல் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப், ஃபெண்டரில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன.


    புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் உள்புறம் பிளாக் நிற இண்டீரியர் செய்யப்பட்டு சில்வர் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஏழு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் சாலிட் வைட், சில்கி சில்வர், கிராணைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது AMT யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்து 500, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    Next Story
    ×