என் மலர்
இது புதுசு

முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா - இந்திய முன்பதிவு துவக்கம்
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
- புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா வாங்க விரும்புவோர் இதனை ரூ. 25 ஆயிரம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் ஏழு மோனோடோன் மற்றும் இருவித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இதுதவிர 1.5 MPi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 6MT மற்றும் இண்டெலிஜண்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் RDE விதிகளுக்கு உட்பட்டு E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
"இன்று, எங்களின் அடுத்த தலைமுறை பாரம்பரிய செடான்- முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் முன்பதிவு துவங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 16 ஆண்டுகளாக, சுமார் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிக மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை வெர்னா மாடல் பெற்று பாரம்பரிய அந்தஸ்துடன் உள்ளது."
"முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் தலைசிறந்த செயல்திறன் மூலம் அலாதியான டிரைவிங் அனுபவத்தை வழங்க இருக்கிறது. இந்த பிரிவில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை இந்த செடான் மாடல் பூர்த்தி செய்யும்," என ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன மூத்த நிர்வாக அதிகாரி தருக் கார்க் தெரிவித்தார்.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.