search icon
என் மலர்tooltip icon

    கார்

    6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்
    X

    6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    • மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடல் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
    • மெர்சிடிஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் மட்டும் GLS, S கிளாஸ், S கிளாஸ் மேபேக், GLS மேபேக் மற்றும் G கிளாஸ் போன்ற மாடல்கள் விற்பனையில் 54 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

    மேலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றம் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் அய்யர் தெரிவித்து இருக்கிறார். ரூ. 4 கோடி மதிப்பிலான AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடலின் 25 யூனிட்களும் வெறும் ஆறே நிமிடங்களில் விற்று தீர்ந்தது என அவர் தெரிவித்தார்.

    மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷனின் கூடுதல் யூனிட்களை இந்தியா கொண்டுவர கிட்டத்தட்ட 90 வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சந்தோஷ் அய்யர் மேலும் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் மெர்சிடிஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    இது 2022 ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 15 ஆயிரத்து 822 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 12 ஆயிரத்து 768 யூனிட்களில் 25 சதவீத யூனிட்கள் டாப் எண்ட் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×