என் மலர்
கார்

ரூ. 13.66 லட்சத்தில் புதிய XUV 7XO அறிமுகம் செய்த மஹிந்திரா... என்னென்ன ஸ்பெஷல்..?
- மஹிந்திரா XUV 7XO காரில் 2.0 லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகின்றன.
மஹிந்திரா நிறுவனம் புதிய XUV 7XO எஸ்யுவி-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் ரூ. 13.66 லட்சமும், டீசல் மாடல் ரூ. 14.96 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (முதல் 40,000 வாங்குபவர்களுக்கு அறிமுக எக்ஸ்-ஷோரூம்). XUV700-ன் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்டான இந்த மாடல், வெளிப்புற வடிவமைப்பு மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் மற்றும் புதிய அம்சங்களைப் பெறுகிறது.
2026 மஹிந்திரா XUV 7XO இன் சிறப்பம்சங்களில் புதிய கிரில், புரொஜெக்டர் அமைப்புடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ரி-வொர்க் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், XEV 9S-இல் LED டெயில் லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
உள்புறத்தில், XUV 7XO இன் AX7L வேரியண்ட் புதிய லுமினா மற்றும் செஸ்ட்-நட் பிரவுன் நிற இன்டீரியர் தீம், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டில் மூன்று ஸ்கிரீன்கள், விருப்ப பின்புற ஸ்கிரீன்கள், டால்பி அட்மாஸ் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் முன் இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், அட்ரினோ-எக்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்பிற்கு முன்புறத்தில், ஏழு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் மற்றும் ஐந்து நட்சத்திர BNCAP ரேட்டிங் பெறுகிறது. மஹிந்திரா XUV 7XO காரில் 2.0 லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகின்றன.
இதில் உள்ள பெட்ரோல் மோட்டார் 197hp பவர், 380Nm டார்க் உருவாக்குகிறது. டீசல் யூனிட் 182hp பவவர், 450Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த கார் மொத்தத்தில் AX, AX3, AX5, AX7, AX7T மற்றும் AX7L என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.






