என் மலர்
கார்

ரூ. 8.94 லட்சத்தில் அட்டகாச அம்சங்களுடன் அறிமுகமான மஹிந்திரா XUV 3XO REVX
- மஹிந்திரா XUV 3XO REVX வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்களைப் பெறுகிறது.
- டூயல் டோன் பிளாக் லெதரெட் இருக்கைகளை கொண்டிருக்கிறது.
மஹிந்திரா XUV 3XO REVX இந்தியாவில் ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி-பிரிவு SUV இப்போது சில வடிவமைப்பு மாற்றங்களையும் அம்சங்களில் அப்டேட்களையும் பெற்றுள்ளது. மஹிந்திரா XUV 3XO REVX- REVX M, REVX M(O), மற்றும் REVX A என மூன்று வேரியண்ட்களைக் கொண்டுள்ளது.
எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:
மஹிந்திரா XUV 3XO REVX மாடல் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இதில் 110 hp பவரையும் 200 Nm டார்க்கையும் வழங்கும் 1.2L mStallion TCMPFi எஞ்சின் மற்றும் 131 hp மற்றும் 230 Nm ஐ வெளியேற்றும் 1.2L mStallion TGDi எஞ்சின் ஆகியவை அடங்கும்.
வெளிப்புற அப்டேட்கள்:
மஹிந்திரா XUV 3XO REVX வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்களைப் பெறுகிறது. இது டூயல் டோன் வண்ணங்களை தரநிலையாகப் பெறுகிறது. இது REVX பேட்ஜிங், டூயல் டோன் ரூஃப், பாடி நிறத்தால் ஆன / கன்மெட்டல் கிரில் மற்றும் R16 கருப்பு நிற வீல் கவர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய XUV 3XO REVX மாடல்கள் கிரே, டேங்கோ ரெட், நெபுலா புளூ, எவரெஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய ஐந்து கண்கவர் வண்ணங்களில் கிடைக்கின்றன.
உட்புறம் மற்றும் அம்சங்கள்:
மஹிந்திரா XUV 3Xo REVX காரின் உட்புறத்தில் 10.24-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்கில் ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுநர் இருக்கை உயரத்தை சரிசெய்யும் அம்சம் மற்றும் பலவற்றைப் பெறுகிறது. மேலும், டூயல் டோன் பிளாக் லெதரெட் இருக்கைகளை கொண்டிருக்கிறது.
இது ஒரு அசத்தலான கேபின் அனுபவத்திற்காக 4-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பைப் பெறுகிறது. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய ESC (HHC) மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகளும் உட்பட 35 நிலையான அம்சங்களுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், REVX A ஆனது Adrenox Connect-ஐ ஒருங்கிணைக்கிறது. இதில் பில்ட்-இன் அலெக்சா, ஆன்லைன் நேவிகேஷன் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மஹிந்திரா XUV 3XO REVX விலை
மஹிந்திரா XUV 3XO REVX M காரின் விலை ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), REVX M (O) விலை ரூ.9.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), XUV 3XO REVX A விலை ரூ.11.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






