search icon
என் மலர்tooltip icon

    கார்

    உச்சக்கட்ட டெஸ்டிங்கில் ஹூண்டாய் ஐயோனிக் 5 N - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    உச்சக்கட்ட டெஸ்டிங்கில் ஹூண்டாய் ஐயோனிக் 5 N - வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஹூண்டாய் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • அதிக செயல்திறன் வழங்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரில் 10 ஸ்பீக்கர் சவுன்ட் சிஸ்டம் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பெர்ஃபார்மன்ஸ் கார், ஐயோனிக் 5 N இறுதிக்கட்ட டெஸ்டிங்கில் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வு நடைபெறும் ஜூலை 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஐயோனிக் 5 N டெஸ்டிங் ஜெர்மனியில் உள்ள நர்பர்கிரிங் பந்தய களத்தில் நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பெர்ஃபார்மன்ஸ் மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதன் மூலம் புதிய ஹூண்டாய் கார் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.

    "எங்களின் ஒவ்வொரு N மாடலும் நர்பர்கிரிங்கில் தான் N டிகிரி வரை டியூனிங் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தான் எங்களது முதல் ஹை-பெர்ஃபார்மன்ஸ், ஆல் எலெக்ட்ரிக் N மாடல், முதலில் இங்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்," என ஹூண்டாய் N பிரான்டு மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பிரிவுக்கான துணை தலைவர் டில் வார்டென்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.

    ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் இந்த பந்தய களத்தில் ஏற்கனவே 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரையிலான டெஸ்டிங்கை எதிர்கொண்டுவிட்டது. மேலும் இறுதிக்கட்ட சோதனையில் மேலும் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை டெஸ்டிங் செய்யப்பட உள்ளது. ஐயோனிக் 5 N மாடலில் வழங்கப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 N மாடல் சற்றே அதிகளவிலான கூலிங் பகுதி கொண்டிருக்கிறது. இத்துடன் N சார்ந்த ரேடியேட்டர் பேக்கேஜிங், மேம்பட்ட மோட்டார் ஆயில் கூலர், பேட்டரி சில்லர் உள்ளிட்டவை மூலம் வெப்பத்தை அதிக சிறப்பாக கட்டுப்படுத்தி காரின் செயல்திறனை மேம்படுத்தப்படுகிறது. இத்துடன் புதிய மென்பொருள் டிசைன் மூலம் பேட்டரி செல்கள் காரினை எப்போதும் பந்தய களத்திற்கு நிகரான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், தயார் நிலையில் வைத்திருக்கிறது.

    ஐயோனிக் 5 N மாடல் இரண்டு விதமான டிரைவ் மோட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதன் முதன்மை பிரேக்கிங் சிஸ்டம், ரிஜெனரேடிவ் பிரேகிங் சிஸ்டம் ஆகும். இத்துடன் 400 மில்லிமீட்டர் டயாமீட்டர் டிஸ்க் கொண்ட ஹைட்ராலிக் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் டிரைவிங் அனுபவத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதற்கு ஆக்டிவ் சவுன்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த சிஸ்டம் காரின் 10 ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவை ஆம்பியன்ட் நாய்ஸ் அனுபவத்தை வழங்குகின்றன. இதனால், எலெக்ட்ரிக் கார் என்ற வகையிலும், இது பெட்ரோல், டீசல் கார்கள் வெளிப்படுத்தும் சத்தத்தை காரினுள் கேட்க முடியும்.

    Next Story
    ×