search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான கிரெட்டா, அல்கசார் அட்வென்ச்சர் எடிஷன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான கிரெட்டா, அல்கசார் அட்வென்ச்சர் எடிஷன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • ஹூண்டாய் அல்கசார் மற்றும் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடல்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.
    • இரண்டு புதிய அட்வென்ச்சர் மாடல்களிலும் காஸ்மடிக் மாற்றங்கள் பிரதானமாக செய்யப்பட்டுள்ளன.

    ஹூண்டாய் நிறுவனம் தனது அல்கசார் மற்றும் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடல்களின் விலையை நேற்று அறிவித்தது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு கார்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

    அந்த வகையில் ஹூண்டாய் அல்கசார் மற்றும் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடல்களில் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் அல்கசார் மற்றும் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடல்கள் ரேன்ஜர் காக்கி நிற ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளன. இவைதவிர காரின் கிரில், ஸ்கிட் பிலேட்கள், சைடு சில்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ORVM-கள், அலாய் வீல் உள்ளிட்டவை பிளாக்டு-அவுட் செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் காரின் பின்புறம் இருக்கும் ஹூண்டாய் லோகோ, கிரெட்டா மற்றும் அல்கசார் எழுத்துக்கள் உள்ளிட்டவை டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்புற ஃபெண்டரில் அட்வென்ச்சர் லோகோ உள்ளது. உள்புறத்தில் ஆல் பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் சேஜ் கிரீன் இன்சர்ட்கள், புதிய இருக்கை மேற்கவர்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், அட்வென்ச்சர்-ஸ்பெக் மேட் மற்றும் மெட்டல் பெடல்கள் வழங்கப்படுகின்றன. கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடல்- அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே, ரேன்ஜர் காக்கி உள்ளிட்ட மோனோடோன் நிறங்களும், அட்லஸ் வைட்-ரேன்ஜர் காக்கி, இரண்டு நிறங்களிலும் அபைஸ் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் அல்கசார் அட்வென்ச்சர் எடிஷன் மாடல்- அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே மற்றும் ரேன்ஜர் காக்கி போன்ற மோனோ டோன் நிறங்களிலும், அட்லஸ் வைட், ரேன்ஜர் காக்கி மற்றும் டைட்டன் கிரே நிறங்களுடன் அபைஸ் பிளாக் ரூஃப் வழங்கப்படுகிறது.

    புதிய அல்கசார் அட்வென்ச்சர் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட், 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், IVT யூனிட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×