search icon
என் மலர்tooltip icon

    கார்

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த EV மாடல் அறிமுகம்
    X

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த EV மாடல் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய பிஎம்டபிள்யூ i7 M70 மாடலில் டூயல் மோட்டார் டிரைவ்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலை அறிமும் செய்தது. இது பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஷாங்காய் மோட்டார் நிகழ்வில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடலில் டூயல் மோட்டார் டிரைவ்டிரெயின் உள்ளது.

    இவை இணைந்து 660 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன. இது 2022 ஆண்டு பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்த iX M60 எக்ஸ்டிரைவ் மாடல் வெளிப்படுத்துவதை விட 41 ஹெச்பி அதிக திறன் கொண்டிருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ காரின் முன்புறம் 258 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், பின்புறம் 490 ஹெச்பி பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மோட்டார்களும் ஒருங்கிணைந்து 1015 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய i7 Xடிரைவ் 60 மாடலில் உள்ள டூயல் மோட்டார் எலெக்ட்ரிக் டிரைவ்டிரெயின் 544 ஹெச்பி பவர், 744 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 488 முதல் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று WLTP சான்று பெற்றுள்ளன.

    தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ i7 எக்ஸ்டிரைவ் 60 மாடலின் விலை ரூ. 1 கோடியே 95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வரிசையில், புதிய பிஎம்டபிள்யூ i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×