search icon
என் மலர்tooltip icon

    கார்

    2023 டாடா ஹேரியர் இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 டாடா ஹேரியர் இந்தியாவில் அறிமுகம்

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட கார் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய டாடா எஸ்யுவி மாடலில் புதிய அப்டேட்களுடன், 10 ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டாடா ஹேரியர் விலை ரூ. 15 லட்சம் என துவங்குகிறது. சஃபாரி விலை ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய ஹேரியர் மாடல் XE, XM, XMS, XT+, XZ, XZ+ XZA+ (O) என ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ராயல் புளூ, ட்ராபிக்கல் மிஸ்ட், கலிப்சோ ரெட், ஆர்கஸ் வைட் மற்றும் டேடோனா கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 2023 ஹேரியர் மாடல் 360 டிகிரி கேமரா, ADAS, புதிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, வெல்கம் ஆப்ஷன் உள்ளது.

    இந்த மாடலில் தொடர்ந்து பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் ORVM, ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், EPB, iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆறு ஏர்பேக், டிரைவ் மோட்கள், டெரைன் மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிஃபயர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்கள் ஆறு மொழிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டாடா ஹேரியர் மாடலிலும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் RDE மற்றும் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 07 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×