search icon
என் மலர்tooltip icon

    கார்

    வேற லெவல் அப்டேட்கள்.. இந்தியாவில் அறிமுகமான 2023 பென்ஸ் GLC..!
    X

    வேற லெவல் அப்டேட்கள்.. இந்தியாவில் அறிமுகமான 2023 பென்ஸ் GLC..!

    • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் புதிய பென்ஸ் GLC மாடல் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய GLC மாடலுக்கான முன்பதிவை கடந்த மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 1.5 லட்சம் ஆகும். தற்போது, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் விலை ரூ. 73.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலில் தற்போதைய மாடலில் இருப்பதை விட வித்தியாசமான காஸ்மடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் அளவில் பெரிய கிரில், பாரம்பரியம் மிக்க பென்ஸ் லோகோ, கிடைமட்டமாக பொருத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த காரின் நீளம் 60 மில்லிமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது 4716 மில்லிமீட்டராக உள்ளது. இதன் மூலம் காரின் வீல்பேஸ் 15 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு தற்போது 2888 மில்லிமீட்டராக இருக்கிறது. காரின் பின்புறத்தில் பம்ப்பர் சற்று கூர்மையாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், பவர்டு டெயில்கேட் வழங்கப்படுகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேடிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×