search icon
என் மலர்tooltip icon

    கார்

    வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான ஹூண்டாய் i20 N லைன்
    X

    வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகமான ஹூண்டாய் i20 N லைன்

    • ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில், புதிய i20 காரின் N லைன் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹூண்டாய் i20 N லைன் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    2023 ஹூண்டாய் i20 N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காரில் போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், 127 எம்பெட் செய்யப்பட்ட வி.ஆர். கமாண்ட்கள், ஓ.டி.ஏ. அப்டேட்கள், வாய்ஸ் கமாண்ட், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே, தண்டர் புளூ மற்றும் ஸ்டேரி நைட் உள்ளிட்டவை மோனோ-டோன் ஆப்ஷனிலும், அட்லஸ் வைட் மற்றும் தண்டர் புளூ இரண்டு நிறங்களுடன் அபைஸ் பிளாக் ரூஃப் டூயல்-டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றன.

    ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் 2023 ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்கும் நிலையில், இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×