search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி வேகன்ஆர்
    X
    மாருதி வேகன்ஆர்

    இந்தியாவில் திரும்பப் பெறப்படும் மாருதி கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடலின் சில யூனிட்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் வாகனங்களில் ஒன்றாக வேகன்ஆர் இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல்களில் 40,000 யூனிட்களை திரும்பப்பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.

    திரும்பப்பெறப்படும் வாகனங்கள் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் ஆகும். வாகனம் சீரற்ற முறையில் இயங்க வழி செய்யும் கோளாறுகள் கண்டறியப்பட்டால், வாகன உற்பத்தியாளர்கள் அவற்றை திரும்பப்பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையை சரி செய்து வழங்குவர்.

    அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் 40,618 வேகன்ஆர் யூனிட்களை திரும்பப்பெற்று கண்டறியப்பட்ட பிரச்சனையை சரி செய்ய இருக்கிறது. நவம்பர் 15, 2018 முதல் ஆகஸ்ட் 12, 2019 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல்களை மாருதி திரும்பப்பெறுகிறது.

    மாருதி வேகன்ஆர்

    கோளாறு கண்டறியப்பட்ட வாகன உரிமையாளர்களை விற்பனையாளர்கள் தொடர்பு கொண்டு வாகனத்தை சரிசெய்ய கொண்டு வர கோருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று (ஆகஸ்ட் 24) முதல் துவங்குகிறது. கண்டறியப்பட்ட கோளாறினை மாருதி சுசுகி இலவசமாக சரிசெய்து வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    முன்னதாக பலமுறை மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் இவ்வாறு திரும்பப்பெறப்பட்டு இருக்கின்றன. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பலேனோ மாடல்களில் ஏ.பி.எஸ். மென்பொருளில் கோளாறு கண்டறியப்பட்டதால் வாகனங்கள் திரும்பப்பெறப்பட்டன. 

    இதேபோன்று இந்த ஆண்டு மே மாதத்திலும் புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ மாடல்கள் திரும்பப்பெறப்பட்டு, சரிசெய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலும் திரும்பப்பெறப்படும் வாகனங்களில் கண்டறியப்பட்ட கோளாறுகள் சிறிய அளவில் இருந்திருக்கின்றன.
    Next Story
    ×