search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஃபோர்டு ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் டீசர் வெளியீடு
    X

    ஃபோர்டு ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் டீசர் வெளியீடு

    ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கார் டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. காரின் ஹார்டுகோர் எடிஷனை 2019 குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கார் அறிமுகமாக இருப்பதையொட்டி காரின் டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. டீசர் புகைப்படம் தவிர காரின் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும், டீசரை பார்க்கும் போது இது வழக்கமான ஜி.டி. போன்று காட்சியளிக்கவில்லை.

    காரின் பின்புறம் ரியர் விங் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் குட்வுட் நிகழ்வில் தான் தெரியவரும். பின்புறம் பிரம்மாண்ட ரியர் விங் மற்றும் ரூஃப் ஸ்கூப் உள்ளிட்டவை இந்த கார் ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் செயல்திறன் வழங்கும் மாடலாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.


    ஃபோர்டு ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் பார்க்க கிட்டத்தட்ட எல்.எம். ஜி.டி.இ. ப்ரோ ரேஸ் கார் போன்றே காட்சியளிக்கிறது. எல்.எம்.பி.1யை தொடர்ந்து எஃப்.ஐ.ஏ. வொர்ல்டு எண்டியூரன்ஸ் சேம்பியன்ஷிப் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் போட்டியில் கலந்து கொள்வது பற்றிய தங்களது முடிவினை அறிவிக்காமல் இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் போட்டியில் கலந்து கொள்வதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், ஆஸ்டன் மார்டின் தனது வேல்கைரி மாடலை களமிறக்குவது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கொண்டு வொர்ல்டு என்டியூரன்ஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி இருக்கிறது.
    Next Story
    ×