என் மலர்
ஆட்டோமொபைல்

கோப்புப்படம்
மஹிந்திரா நிறுவன கார்களின் விலை அதிரடி மாற்றம்
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மாற்றியமைத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. புதிய விலை ஜூலை 1 ஆம் தேதி முசதல் அமலாகிறது.
புதிய விலை மாற்றத்தால் மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து வாகனங்களின் விலை ரூ.36,000 வரை அதிகரிக்கிறது. இந்தியாவில் மஹிந்திராவின் அனைத்து வாகனங்களிலும் ஏ.ஐ.எஸ். 145 பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கி இருப்பதால் விலை அதிகரிக்கப்படுகிறது.
ஜூலை 1, 2019 ஆம் தேதி முதல் வாகனங்களில் டிரைவர் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீடு அலெர்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி. 300 மாடலில் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அல்டுராஸ் ஜி4 மாடலிலும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.
தார் மாடல் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு, தார் 700 ஸ்பெஷல் எடிஷன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய தார் 700 விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story






