என் மலர்
பைக்

மதுரையில் பிரமாண்டம் - 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்ச்சியை நடத்தி அசத்திய யமஹா
- யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிராண்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வீக்கெண்ட் நிகழ்வு நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் யமஹா ரசிகர்கள் கலந்து கொண்டு, ரைடிங் மற்றும் யமஹா தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர்.
"தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற பிராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடிஏ ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் (உணர்ச்சிமிக்க யமஹா உரிமையாளர்களின் சமூகம்) 500 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 1000 யமஹா ரசிகர்கள் இந்த வீக்கெண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம், ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் யமஹாவின் பிரீமியம் மாடல் வரம்பில் சிறந்த தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் சவாரி திறனை கூர்மைப்படுத்தும் நோக்கிலும் ஜிம்கானா ரைடு போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் உற்சாகத்தை உருவாக்க, டெஸ்ட் ரைடு செயல்பாடு, யமஹா தயாரிப்பு வரம்பின் காட்சி மற்றும் ஒரு அக்சஸரீக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் யமஹா பிராண்டின் அர்ப்பணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்வை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.






