என் மலர்

  பைக்

  டிவிஎஸ் ரோனின் பற்றி இதெல்லாம் தெரியுமா?
  X

  டிவிஎஸ் ரோனின் பற்றி இதெல்லாம் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் புதிய ரோனின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
  • இந்த மாடலில் 225சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

  டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ரோனின் மாடல் இந்த பிரிவில் மிகவும் தாமதமாக எண்ட்ரி கொடுத்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ரோனின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  என்ஜின் விவரங்கள்: புதிய ரோனின் மாடலில் உள்ள என்ஜின் குறைந்த மற்றும் மிட்-ரேன்ஜ் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த ஏர் மற்றும் ஆயில் கூல்டு 225.9சிசி என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணி்க்கு 120 கிமீ வேரத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


  சேசிஸ் மற்றும் விவரங்கள்: டிவிஎஸ் ரோனின் மாடலில் டபுள்-கிராடில் பிரேம் மற்றும் அட்ஜஸ்ட் செய்யும் வசதியில்லா 41 மில்லிமீட்டர் ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க், கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் மொத்த எடை 160 கிலோ ஆகும். இதன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் 159 கிலோ எடை கொண்டுள்ளது. இதில் 14 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.

  இதர அம்சங்கள்: புதிய ரோனின் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டி.ஆர்.எல்., இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், பிளாக் நிற என்ஜின் கவுல், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் முழு எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×