search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 வினியோகம் துவக்கம்
    X

    இந்தியாவில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 வினியோகம் துவக்கம்

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 பைக் கவாசகி வல்கன் S மற்றும் பெனலி 502C மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சூப்பர் மீடியோர் 650 மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய மிடில்வெயிட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 3 லட்சத்து 48 ஆயிரத்து 900 என துவங்குகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கின.

    இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு தனது சூப்பர் மீடியோர் 650 மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களும் அவற்றுக்கான நிறம் மற்றும் ஹார்டுவேர் அம்சங்களை கொண்டு வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷன் ஐந்து நிறங்கள்- ஆஸ்ட்ரல் பிளாக், ஆஸ்ட்ரல் புளூ, இண்டர்ஸ்டெல்லார் கிரே மற்றும் இண்டர்ஸ்டெல்லார் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

    இதன் டூரர் வேரியண்ட் உயரமான விண்ட்ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட் போன்ற கூடுதல் அக்சஸரீக்களை கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் செலஸ்டியல் ரெட் மற்றும் செலஸ்டியல் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. சூப்பர் மீடியோர் 650 மாடலின் இரண்டு வேரியண்ட்களிலும் குரூயிசர் மாடல் போன்ற டிசைன் உள்ளது.

    அதன்படி இவற்றில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட் உள்ளது. இதன் ஸ்விட்ச்கியர் சரவுண்ட், ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட், ட்வின்-சைடட் எக்சாஸ்ட் பைப்களில் அலுமினியம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டூரர் வெர்ஷனில் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட கூடுதல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவைதவிர இரு வேரியண்ட்களிலும் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. இத்துன் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளை கொண்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் இது ஆகும். இதன் பின்புறம் டுவின்-சைடட் ரியர் ஸ்ப்ரிங்குகள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் சிங்கில் டிஸ்க் மற்றும் பைபர் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஏற்கனவே ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 648சிசி, பேரலல் டுவின், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் தின் கொண்டுள்ளது.

    Next Story
    ×