search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டெஸ்டிங்கில் சிக்கிய RE ரோட்ஸ்டர் 450
    X

    டெஸ்டிங்கில் சிக்கிய RE ரோட்ஸ்டர் 450

    • ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை வெளியாகி உள்ளன.
    • இந்த மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மாடல்கள் அந்நிறுவனத்தின் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்று ரோட்ஸ்டர் 450. புதிய ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

    அந்த வரிசையில் புதிய ரோட்ஸ்டர் 450 டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய புகைப்படங்களின் படி இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், தடித்த ஃபியூவல் டேன்க், அளவில் சிறிய பக்கவாட்டு பேனல்கள், மெல்லிய டெயில் பகுதி இடம்பெற்றுள்ளது.


    இத்துடன் இன்டகிரேட் செய்யப்பட்ட டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இ.டி. லைட்டிங், டி.எஃப்.டி. பேனல், எல்.சி.டி. கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. பிரேக்கிங்கிற்கு இந்த மாடலின் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம்.

    புதிய ரோட்ஸ்டர் 450 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 39.47 ஹெச்.பி. பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலின் விலை ரூ. 2.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் 450 மாடல் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் கே.டி.எம். 390 டியூக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×