search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இண்டர்செப்டார், GT 650 மாடல்களில் அலாய் வீல் வழங்கும் ராயல் என்பீல்டு
    X

    இண்டர்செப்டார், GT 650 மாடல்களில் அலாய் வீல் வழங்கும் ராயல் என்பீல்டு

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டார், GT 650 மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • விரைவில் இரு மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் தனது பிரபலமான இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்களை அப்டேட் செய்ய இருக்கிறது. இரு மாடல்களிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அலாய் வீல்கள், டியூப்லெஸ் டையர்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அலாய் வீல்களை கொண்ட ராயல் என்பீல்டு காண்டினெண்டல் GT 650 ஸ்பை படம் வெளியாகி இருந்தது.

    ஸ்பை படங்களை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களை வைத்து புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். ஸ்பை படத்தில் இருந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட டெயில் லேம்ப் இடம்பெற்று இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் யூனிட்களில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் உள்ளது.

    புதிய மேம்பட்ட மாடல்கள் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம். சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டார் மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்கள் இந்தியா மட்டுமின்றி சர்வேதச சந்தையிலும் அதிகம் பிரபலமாக உள்ளன. அலாய் வீல், டியூப்லெஸ் டையர் போன்ற அப்டேட்கள் இந்த மாடல்களின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும்.

    ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மால்கள் OBD-2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இண்டர்செப்டார் 650 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. காண்டினெண்டல் GT 650 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 31 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல்களின் விலை இதைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.

    Photo Courtesy: AutocarIndia

    Next Story
    ×