என் மலர்

  பைக்

  விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய ஹண்டர் 350 - ராயல் என்பீல்டு அசத்தல்
  X

  விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய ஹண்டர் 350 - ராயல் என்பீல்டு அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • 349சிசி என்ஜின் கொண்டிருக்கும் ஹண்டர் 350 மாடல் ஜெ சீரிஸ் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

  ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. அதன்படி ஒவ்வொர மாதமும் சுமார் 17 ஆயிரம் ஹண்டர் 350 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

  விற்பனை மைல்கல் தவிர ஹண்டர் 350 மாடல் 2023 ஆண்டின் இந்திய மோட்டார்சைக்கிள் எனும் விருதை வென்றது. ஹண்டர் 350 மாடல் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது. அதிநவீன-ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் அசத்தலான செயல்திறன் மூலம் ஹண்டர் 350 பலருக்கும் சிறந்த தேர்வாக இருக்கிறது.

  முற்றிலும் புதிய ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் ஹண்டர் 350 மாடலில் 349 சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.8 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

  ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த கிரவுண்ட் க்ளியரன்ஸ்-ஐ எதிர்கொள்ளும் வகையில் இத்தகைய சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ரெட்ரோ வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்றும் மெட்ரோ வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 67 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 71 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹண்டர் 350 மாடல் டிவிஎஸ் ரோனின் 225 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இதுதவிர கீவே SR250, ஹோண்டா CB350RS மற்றும் ஜாவா 42 போன்ற மாடல்களை எதிர்கொள்கிறது.

  Next Story
  ×