search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரைடு மோடு, எல்.இ.டி. லைட்டிங்.. அசத்தலாக உருவாகும் ஹிமாலயன் 452.. லீக் ஆன புது தகவல்
    X

    கோப்புப் படம் 

    ரைடு மோடு, எல்.இ.டி. லைட்டிங்.. அசத்தலாக உருவாகும் ஹிமாலயன் 452.. லீக் ஆன புது தகவல்

    • இந்த பைக்கின் மிகமுக்கிய அம்சமாக ஷெர்பா 450 என்ஜின் இருக்கிறது.
    • இத்துடன் அசிஸ்ட் கிளட்ச், ரைடு-பை-வயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹிமாலயன் 452 பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. முன்னதாக இந்த மாடல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்தது. எனினும், முதல்முறையாக இந்த பைக்கின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

    ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் பல்வேறு பாடி ஸ்டைல் கொண்ட மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பைக்கின் மிகமுக்கிய அம்சமாக ஷெர்பா 450 என்ஜின் இருக்கிறது. புதிய என்ஜின் 452சிசி திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    கோப்புப் படம்

    இது சிங்கில் சிலிண்டர் என்ஜின் ஆகும். இத்துடன் 4 வோல்ட் ஹெட் மற்றும் DOHC செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. லிக்விட் கூலிங் ஆர்கிடெக்ச்சர் கொண்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் பைக் இது என்று தெரிகிறது. இந்த என்ஜின் 40 பி.எஸ். பீக் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கலாம்.

    இத்துடன் அசிஸ்ட் கிளட்ச், ரைடு-பை-வயர் சிஸ்டம், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் டுவின்-ஸ்பார் ஸ்டீல் டியுபுலர் ஃபிரேம் புதிதாக வழங்கப்படுகிறது. இத்துடன் 43 மில்லிமீட்டர் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.

    தற்போதைய ஹிமாலயன் 411 போன்றே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் வீல் வழங்கப்படுகிறது. இத்துடன் சியட் பிராண்டு டயர்கள், பிரேக்கிங்கிற்கு 320 மில்லிமீட்டர் வென்டிலேட் செய்யப்பட்ட டிஸ்க் மற்றும் டபுள் பிஸ்டன் கேலிப்பர், பின்புறம் 270 மில்லிமீட்டர் வென்டிலேட் செய்யப்பட்ட டிஸ்க் மற்றும் சிங்கில் பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய அம்சமாக வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 17 லிட்டர் ஃபியூவல் டேன்க், எல்.இ.டி. ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர்கள், ரைடு மோட்கள், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட், 4 இன்ச் அளவில் வட்ட வடிவம் கொண்ட டி.எஃப்.டி. இன்ஸட்ரூமென்ட் டிஸ்ப்ளே, போன் கனெக்டிவிட்டி, கூகுள் மேப் மற்றும் மீடியா கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×