search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டெஸ்டிங்கில் சிக்கிய ராயல் என்பீல்டு 650 - ஸ்பை படங்கள் வெளியீடு!
    X

    கோப்புப்படம் 

    டெஸ்டிங்கில் சிக்கிய ராயல் என்பீல்டு 650 - ஸ்பை படங்கள் வெளியீடு!

    • ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி கிளாசிக் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.
    • புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய கிளாசிக் 650 மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் அதிக தெளிவற்ற நிலையிலேயே காட்சியளிக்கின்றன. எனினும், புதிய கிளாசிக் 650 மாசலின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் டிசைன் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

    ஸ்பை படங்களில் உள்ள மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஃபோர்க் கவர்கள், கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்ற ஹெட்லேம்ப் கேசிங் உள்ளது. இத்துடன் வயர்-ஸ்போக் வீல்கள், நீண்ட மட்கார்டுகள், ஸ்ப்லிட் சீட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மாடலில் பீஷூட்டர் எக்சாஸ்ட்கள் உள்ளன. இது பைக்கின் ஒட்டுமொத்த டிசைனுடன் ஒற்றுப் போகும் வகையில் உள்ளது.

    Photo Courtesy: Bikewale

    இந்த மாடலில் சென்டர்-செட் ஃபூட்பெக், அப்ரைட் ஹேன்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிளாசிக் 650 மாடல் சூப்பர் மீடியோர் 650 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பதால், இந்த மாடலில் 648சிசி, ஆயில் கூல்டு, டுவின் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மாடல் 2025 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடலின் விலை இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீடியோர் 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், இதன் விலை ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்படலாம்.

    Next Story
    ×