என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் கேடிஎம் RC 160?
    X

    விரைவில் இந்தியா வரும் கேடிஎம் RC 160?

    • இது WP Apex அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும்.
    • கேடிஎம்160 டியூக்கைப் போலவே அதே இலகுவான அலாய் வீல்களையும் கொண்டிருக்கும்.

    கேடிஎம் நிறுவனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் தனது RC 160 பைக்கை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ. 1.85 லட்சம் முதல் ரூ. 1.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய ஸ்பை புகைப்படங்களின் படி, வரவிருக்கும் RC 160, அதிக திறன் கொண்ட கேடிஎம் RC 200 இன் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்த பைக்கில் கேடிஎம்160 டியூக் மாடலில் உள்ள அதே 164.2cc, லிக்விட் கூல்டு, சிங்கில்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த யூனிட் 18.7hp பவர், 15.5Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும். இருப்பினும், சிறந்த டாப்-எண்ட் செயல்திறனுக்காக கேடிஎம் இந்த பைக்கில் டியூனிங்கை மாற்றலாம்.

    இது தவிர, இந்த பைக் அதன் பெரும்பாலான பாகங்களை கேடிஎம்160 டியூக்குடன் பொதுவானதாகப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது WP Apex அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். மேலும் கேடிஎம்160 டியூக்கைப் போலவே அதே இலகுவான அலாய் வீல்களையும் கொண்டிருக்கும்.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 320mm, பின்புறம் 230mm டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ABS வழங்கப்படலாம். கேடிஎம் நிறுவனம், 160 டியூக் பைக்கை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதைப் போலவே, LCD கன்சோலுடன் கூடிய மோட்டார்சைக்கிளை வழங்க வாய்ப்புள்ளது.

    இந்திய சந்தையில் புது கேடிஎம் பைக் 150-160cc பிரிவில் செயல்திறன் சார்ந்த சூப்பர்ஸ்போர்ட் மாடலான யமஹா R15 4V மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

    Next Story
    ×