search icon
என் மலர்tooltip icon

    பைக்

    முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS - வெளியீட்டு தேதி அறிவிப்பு!
    X

    முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS - வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் R 1250 GS மாடல் வெளியீட்டு விவரம் அறிவிக்கப்பட்டது.
    • புதிய பிஎம்டபிள்யூ மாடலில் ரேடார் சார்ந்த குரூயிஸ் கண்ட்ரோல் வழங்கப்படம் என தெரிகிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சை்கிளை செப்டம்பர் 28-ம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் முதற்கட்டமாக பெர்லினில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் R 1250 GS மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 1300சிசி பாக்சர் டுவின் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 143 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.

    இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது தற்போதைய 1250 மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய R 1250 GS மாடலின் டிசைன் விவரங்கள் வெளியாகி உள்ளன.

    பிஎம்டபிள்யூ R 1250 GS மாடலில் எல்இடி ஹெட்லைட், ரேடார் சிஸ்டம், பீக் மற்றும் ஆக்சிலரி லைட்கள், சிறிய வைசர் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 17 இன்ச் வீல் வழங்கப்படுகிறது.

    இத்துடன் எல்இடி இலுமினேஷன், ரேடார் சார்ந்த குரூயிஸ் கண்ட்ரோல், கொலிஷன் வார்னிங், பிலைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங், டிஜிட்டல் கன்சோல், ஜிபிஎஸ், ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    செப்டம்பர் அறிமுக நிகழ்வை தொடர்ந்து பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது R 1250 GS மாடலை இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    Next Story
    ×