search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் பிஎம்டபிள்யூ விலை உயர்ந்த சூப்பர்பைக் அறிமுகம் - ரூ. 49 லட்சம் தான்..!
    X

    கோப்புப்படம் 

    இந்தியாவில் பிஎம்டபிள்யூ விலை உயர்ந்த சூப்பர்பைக் அறிமுகம் - ரூ. 49 லட்சம் தான்..!

    • புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR பைக் மணிக்கு அதிகபட்சம் 314 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இது பிஎம்டபிள்யூ S 1000 RR மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    2023 பிஎம்டபிள்யூ M 1000 RR ஸ்டான்டர்டு ரூ. 49 லட்சம்

    2023 பிஎம்டபிள்யூ M 1000 RR காம்படீஷன் ரூ. 55 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2024 பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் தோற்றத்தில் அதிக ஸ்போர்ட் தோற்றம் மற்றும் டிராக் சார்ந்த மாடல் போன்று காட்சியளிக்கிறது. தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் இது ஆகும். இந்த மாடல் முழுக்க கார்பன்-ஃபைபர் பாடிவொர்க், விங்லெட்கள், கார்பன் வீல்கள், பிஎம்டபிள்யூ M தீம் கொண்ட பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ M 1000 RR மாடலில் 999சிசி, இன்லைன், 4 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 314 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏழு ரைடு மோட்கள் மற்றும் ஏராளமான வசதிகள் இந்த சூப்பர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் டூயல் 320mm டிஸ்க்குகள், பின்புறம் 220mm டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர்பைக் டுகாட்டி பனிகேல் V4R மாடலுக்கு போட்டியாக அமைகிறது. டுகாட்டி பினிகேல் V4 R மாடலின் விலை ரூ. 69 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×