search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கிளாசிக் 350
    X
    கிளாசிக் 350

    இந்தியாவில் கிளாசிக் 350 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவில் புதிய கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலின் விலை ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பி.எஸ். 6 விலை தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ். 4 மாடலின் விலையை விட ரூ. 11,000 அதிகம் ஆகும்.

    புதிய கிளாசிக் 350 மாடலில் மேம்பட்ட 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் விவரங்களை ராயல் என்ஃபீல்டு இதுவரை அறிவிக்கவில்லை. தற்போதைய பி.எஸ். 4 என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 

    கிளாசிக் 350

    கிளாசிக் 350 மாடலில் பி.எஸ். 6 என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தில் வருகிறது. தற்போதைய மாடல்களில் கார்புரேட்டர் ரக என்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன. என்ஜின் தவிர ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலில் புதிய அலாய் வீல்கள், புதிய நிறத்தில் கிடைக்கின்றன.

    ஏற்கனவே கிடைக்கும் ஸ்டெல்த் பிளாக் மற்றும் குரோம் பிளாக் நிறங்களுடன் கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடல்: சிக்னல்ஸ் ஏர்போன் புளூ, சிக்னல்ஸ் ஸ்டாம்ரைடர் சேண்ட், கன்மெட்டல் கிரே மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் கிளாசிக் 350 பி.எஸ். 6 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்களில் புதிய மோட்டார்சைக்கிளை ரூ. 10,000 கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    Next Story
    ×