என் மலர்

  ஆட்டோமொபைல்

  ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
  X
  ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

  ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஃபிளாட் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் ஃபிளாட் டிராக்கர் மோட்டார்சைக்கிள் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்ட் பார்க்க ஃபிளாட் டிராக்கர் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. 

  புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதுடன், பிக்ராக் டர்ட்பார்க் உடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் ஃபிளாட் டிராக்கிங் பள்ளியை துவங்கி இருக்கிறது. இதற்கு ராயல் என்ஃபீல்டு ஸ்லைடு ஸ்கூல் என பெயரிடப்பட்டுள்ளது.

  ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ஃபிளாட் டிராக்கிற்கு தயார்படுத்தும் வகையில், மோட்டார்சைக்கிளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் தோற்றம் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. ஹெட்லேம்ப் பகுதியில் எண் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

  ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

  எக்சாஸ்ட் உயர்த்தப்பட்டு, டெயில் பகுதியின் அருகே பொருத்தப்பட்டுள்ளது. கஸ்டம் ஹிமாலயன் மாடலின் முன்புறம் பிரேக் நீக்கப்பட்டுள்ளது. ஃபிளாட் டிராக்கர் மாடல்களில் எப்போதும் முன்புற பிரேக் வழங்கப்படாது. மாற்றியமைக்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் எடை 164 கிலோ ஆகும்.

  கார்பன் ஃபைபர் சீட் மற்றும் சிறிய எஸ்&எஸ் சைக்கிள்ஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதை எடை குறைவிற்கு காரணம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளில் 18 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புற டையர் வித்தியாதமாக இருக்கிறது. பின்புற டையர் அகலமாக இருக்கிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
  Next Story
  ×