search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ராயல் என்ஃபீல்டு 650
    X
    ராயல் என்ஃபீல்டு 650

    விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் சீரிஸ் மாடல்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியிருக்கிறது.



    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்கள் கடந்திருக்கிறது. விற்பனை துவங்கிய பத்து மாதங்களில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 650சிசி பிரிவில் குறைந்த காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 650சிசி பிரிவில் இவற்றின் விலை இந்தியாவில் மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் அதிநவீன கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650

    கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×