என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ் துவக்கம்!
    X

    டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ் துவக்கம்!

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV எலெக்ட்ரிக் கார் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
    • இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத வாக்கில் தனது குறஐந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக டியாகோ EV அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் இருவித பேட்டரி பேக் மற்றும் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் இந்த காரை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில், டாடா டியாகோ EV காரின் டெஸ்ட் டிரைவ்கள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் டியாகோ EV கார் டெஸ்ட் டிரைவ் செய்ய வழங்கப்படுகிறது. டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 230 மற்றும் 315 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    சார்ஜிங் ஆப்ஷன்களை பொருத்தவரை 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் மற்றும் 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில்- சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவ் மோட்கள் உள்ளன. இத்துடன் நான்கு ரி-ஜென் மோட், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், 7-இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், கூல்டு குளோவ்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் இம்மாதமே துவங்குகிறது. இதுதவிர டியாகோ EV காரின் விலை மூன்றில் இருந்து அதிகபட்சம் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. டாடா டியாகோ EV தவிர, டிகோர் EV மற்றும் நெக்சான் EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×