என் மலர்
ஆட்டோ டிப்ஸ்

யூரோ NCAP டெஸ்டிங்கில் அசத்திய பென்ஸ் எலெக்ட்ரிக் கார்
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE எலெக்ட்ரிக் கார் மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. பெரியவர்கள் பயணிக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு வழங்குகிறது என்ற சோதனையில் 38-க்கு 36.4 புள்ளிகளை புதிய பென்ஸ் EQE பெற்று இருக்கிறது. இதே போன்று சிறியவர்களுக்கு பாதுகாப்புக்கான சோதனையில் 49-க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது.
யூரோ NCAP டெஸ்டிங்கில் பென்ஸ் EQE 350+ வேரியண்ட் கலந்து கொண்ட நிலையில், இந்த புள்ளிகள் வலது புறம் மற்றும் இடது புற ஸ்டீரிங் கொண்ட மாடல்களுக்கானது தான். முதல் முறையாக யூரோ NCAP டெஸ்டிங்கில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆக்டிவ் எமர்ஜென்சி ஸ்டாப் அசிஸ்ட் சோதனை நடத்தப்பட்டது. இந்த அம்சம் வழங்கியதற்காக EQE மாடல் யூரோ NCAP பாராட்டை பெற்றது.
சாலையில் கடந்து செல்லும் பயனர்களுக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பானது என்ற சோதனையில் EQE மாடல் 45.1 மற்றும் 13.1 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இவை பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோருக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பாக விளங்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE 350 4மேடிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 558 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த காரின் செயல்திறன் 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. EQE 500 4மேடிக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 547 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் டூயல் மோட்டார் செட்டப் 402 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
AMG மாடலின் பேஸ் வேரியண்ட் EQE 43 4மேடிக் மாடல் டூயல் மோட்டார் செட்டப் 469 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQE 43 4மேடிக் எஸ்யுவி முழு சார்ஜ் செய்தால் 488 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
Photo Courtesy: Euro NCAP






