என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் புது பென்ஸ் கார் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் புது பென்ஸ் கார் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.
    • இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும்.

    மெர்சிடிஸ் AMG EQS 53 4மேடிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 2 கோடியே 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடலை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது மெர்சிடிஸ் எலெக்ட்ரிக் மாடலாக AMG EQS 53 அமைந்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் AMG EQS 53 4 மேடிக் பிளஸ் மாடல் ஆடி இ டிரான் RS மற்றும் போர்ஷே டேகேன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இது தவிர மெர்சிடிஸ் நிறுவனம் 580 எலெக்ட்ரிக் செடான் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    புதிய மெர்சிடிஸ் AMG EQS 53 4 மேடிக் பிளஸ் மாடல் AMG.EA பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் பேஸ் வேரியண்ட் 658 ஹெச்பி பவர், 950 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார்- ஸ்லிப்பரி, கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இண்டிவிஜூவல் என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    Next Story
    ×