என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  மஹிந்திரா XUV400 டெஸ்ட் டிரைவ் துவக்கம்
  X

  மஹிந்திரா XUV400 டெஸ்ட் டிரைவ் துவக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார் டெஸ்ட் டிரைவ் துவங்கி நடைபெற்று வருகிறது.
  • வரும் வாரங்களில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் கார் விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

  மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 மாடலை செப்டம்பர் 2022 வாக்கில் அறிவித்தது. தற்போது இந்த மாடலுக்கான விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் உள்ளிட்டவை வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான டெஸ்ட் டிரைவ் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

  புது XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் XUV300 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் பேஸ், EP மற்றும் EL என மூன்று வேரிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

  புதிய மஹிந்திரா XUV400 மாடலில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் 3.3 கிலோவாட்/16A ஹோம் சார்ஜர், 7.2 கிலோவாட்/32A ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

  மஹிந்திரா XUV400 காரை DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். ஹோம் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய 13 மணி நேரங்கள் ஆகும். இந்த கார் ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் ஏராளமான அம்சங்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV400 மாடலின் விலை ரூ. 17 லட்சத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

  Next Story
  ×