search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மஹிந்திரா XUV400 முன்பதிவு மற்றும் டெலிவரி எப்போ தொடங்குது தெரியுமா?
    X

    மஹிந்திரா XUV400 முன்பதிவு மற்றும் டெலிவரி எப்போ தொடங்குது தெரியுமா?

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்- XUV400-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV400 மாடலின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடலில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காருடன் 50 கிலோவாட், 7.2 கிலோவாட் AC மற்றும் 3.3 கிலோவாட் AC சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மஹிந்திரா XUV400 மாடல் தோற்றத்தில் XUV300 போன்றே காட்சியளிக்கிறது. இதில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV400 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கலர்டு MID, எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் விலை டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி இசட்எஸ் EV போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம்.

    Next Story
    ×