search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    பாதுகாப்பு சோதனையில் 5-ஸ்டார் பெற்று அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்
    X

    பாதுகாப்பு சோதனையில் 5-ஸ்டார் பெற்று அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் மாடல் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஹூண்டாய் தனது ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை காட்சிக்கு வைத்தது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் யூரோ NCAP பாதுகாப்பு பரிசோதனைில் ஐந்து ஸ்டார்களை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த செடான் மாடல் யூரோ NCAP புது பாதுகாப்பு பரிசோதனைகளின் கீழ் டெஸ்டிங் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது கோனா மற்ரும் ஐயோனிக் 5 மாடல்களை தொடர்ந்து அறிமுகமான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் பெரியவர்கள் பாதுகாப்பிற்கு 97 சதவீத புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 87 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. மேலும் கரடுமுரடான சாலைகளில் 66 சதவீதமும், பாதுகாப்பு சோதனையில் 90 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முன்புற ஏர்பேக், பக்கவாட்டில் ஹெட் ஏர்பேக், செஸ்ட் ஏர்பேக், பெல்விஸ் ஏர்பேக், செண்டர் ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெல்ட் பிரீ-டென்ஷனர், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அசிஸ்டன்ஸ், லேன் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    ஐயோனிக் 6 மாடல் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டது. ஸ்டைலிஷ் ஃபுல் எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஏரோடைனமிக் சில்ஹவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் பிக்சல் ஸ்டைல் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் டக்டெயில் ரியர் ஸ்பாயிலர், வளைந்த ஷோல்டர் லைன் உள்ளது.

    ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் 53 கிலோவாட் ஹவர் மற்றும் 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் சிங்கில் மோட்டார் RWD ஸ்டாண்டர்டு அம்சமாகவும், டாப் வேரியண்ட்களில் டூயல் மோட்டார், AWD ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஐயோனிக் 6 காரில் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×