search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    4-வீல் டிரைவ் வசதியுடன் உருவாகும் டாடா எலெக்ட்ரிக் எஸ்யுவி
    X

    4-வீல் டிரைவ் வசதியுடன் உருவாகும் டாடா எலெக்ட்ரிக் எஸ்யுவி

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
    • எதிர்கால எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களில் டாடா நிறுவனம் 4-வீல் டிரைவ் வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போதைய மாடல்கள் தவிர, முற்றிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

    இது பற்றிய பிடிஐ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் 4-வீல் டிரைவ் வசதியை வழங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

    "எங்களின் குறிக்கோள் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதனை வழங்க முயற்சிப்பதில் இருக்கும். எங்களது எதிர்கால எஸ்யுவி மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் இந்த வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் பிரிவு நிர்வாக இயக்குனர், சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    எனினும், எந்தெந்த மாடல்களில் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்பது பற்றி டாடா மோட்டார்ஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. நெக்சானை விட பெரிய எஸ்யுவி-க்களில் மட்டுமே 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் டாடா கர்வ் எலெக்ட்ரிக் வாகன கான்செப்டில் இந்த வசதி வழங்கப்படலாம். இது மிட்-சைஸ் எஸ்யுவி ஆகும்.

    Next Story
    ×