search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மெர்சிடிஸ் EQS
    X
    மெர்சிடிஸ் EQS

    536Hp பவர், 660 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் மெர்சிடிஸ் EQS அறிமுகம்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் பல்வேறு பவர்-டிரைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். மற்ற மெர்சிடிஸ் ஃபிளாக்‌ஷிப் மாடல்களை போன்றே, புதிய EQS எஸ்.யு.வி. மாடலிலும் கில்ஸ், MBUX ஹைப்பர் ஸ்கிரீன், டிஜிட்டல் ஹெட்லைட்கள், ஆக்மெண்டெட் ரியாலிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மெர்சிடிஸ் EQS

    அளவில் புதிய மெர்சிடிஸ் EQS 5125mm நீளமாகவும், 1959mm அகலமாகவும், ஒட்டுமொத்தமாக 1718mm உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3210mm அளவில் இருக்கிறது. இந்த காரில் மூன்றாம் கட்ட இருக்கைகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    மெர்சிடிஸ் EQS மாடல் 2 மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சம் 536 பி.ஹெச்.பி. வரையில் பல்வேறு டியூனிங்கில் செயல்திறன் வழங்கும் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 660 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×