என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்யுவி500
    X
    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆக இருக்கின்றன.


    மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இம்முறை காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள் சற்றே தெளிவாக காட்சியளிக்கின்றன.

    அதன்படி வெளிப்புறத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் புது அலாய் வீல்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், புதிய எல் வடிவ எல்இடி டெயில் லைட்கள், பின்புற வாஷர் மற்றும் வைப்பர், டெயில் கேட் மவுண்ட் செய்யப்பட்ட நம்பர் பிளேட் உள்ளிட்டவை காணப்படுகிறது.
     
     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    உள்புறத்தில் புல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்வின் ஸ்கிரீன் லே-அவுட் கொண்டுள்ளது. இதன் இரண்டாவது திரை தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். 

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட் மற்றும், ஏடபிள்யூடி யூனிட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×