search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா ஸ்கார்பியோ
    X
    மஹிந்திரா ஸ்கார்பியோ

    டிரைவ் மோட் செலக்டர் அம்சத்துடன் உருவாகும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2020 ஸ்கார்பியோ காரில் டிரைவ் மோட் செலக்டர் அம்சம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய காரில் டிரைவ் மோட் செலக்டர் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இதில் எத்தனை டிரைவ் மோட்கள் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    இத்துடன் 2020 ஸ்கார்பியோ காரில் புதிய டேஷ்போர்டு வழங்கப்படுகிறது. இது தற்போதைய காரில் இருப்பதைவிட உயரமாகவும், அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது. இது காருக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இதில் 9.0 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ ஸ்பை படம்

    பெரும்பாலும் 9.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் எண்ட் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்களில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் வெளியிடப்படும். அதன்படி இந்த காரில் புதிய லேடர் ஃபிரேம் சேசிஸ், புதிய பாடி பேனல்கள் வழங்கப்படலாம். இதில் நீண்ட வீல்பேஸ், கேபினில் அதிக இடவசதி வழங்கப்படலாம்.

    அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காரில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படலாம். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: GaadiWaadi
    Next Story
    ×