என் மலர்

  ஆட்டோமொபைல்

  புகைப்படம் நன்றி: autopunditz
  X
  புகைப்படம் நன்றி: autopunditz

  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை விவரங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MahindraXUV300  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய புகைப்படங்களின் படி இந்த கார் புதிய மஹிந்திரா சீரிசின் பேஸ் வேரியன்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

  புதிய சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், எக்ஸ்.யு.வி. 500 போன்றே எக்ஸ்.யு.வி. 300 மாடலும் டபுள்யூ ரகத்தில் கிடைக்கும் என்றும் இது டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ 8 மற்றும் டபுள்யூ10 உள்ளிட்ட வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

  ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் க்ரோம் பிட்கள் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பேஸ் வேரியன்ட் மாடலின் பம்ப்பரில் பிளாக் கிளேடிங் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.


  புகைப்படம் நன்றி: autopunditz

  காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப் மற்றும் பின்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் கேபின் பற்றிய புகைப்படங்கள் தெளிவாக இல்லாத நிலையிலும் சென்டர் கன்சோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டிரைவர் பக்க கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

  புதிய மஹிந்திரா கார் 12 வோல்ட் யூனிட் கொண்ட பவர் சாக்கெட், யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் இன் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லீவர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 

  கார் என்ஜின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் ஜி80 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
  Next Story
  ×