என் மலர்tooltip icon
    • கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    கடத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர் மோனிகா முன்னிலையில் நடந்தது.

    முகாமில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தற்காலிக தடுப்புகள், தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளது.
    • ஆபத்தான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு விடுமுறையை கொண்டாடுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்குச் செல்ல பென்னாகரம் பகுதியில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் அடர்ந்த வனப் பகுதிக்குள்ளும், நான்கு கிலோமீட்டர் ஆபத்தான பள்ளம் கொண்ட கணவாய் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

    ஒகேனக்கல் கணவாய் சாலை தொடக்கத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் எச்சரிக்கை பலகை கள், வளைவுப் பகுதிக்கான குறியீடு பலகை, வளைவுகளில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தால் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுமினிய தற்காலிக தடுப்புகள், தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளது.

    மேலும் ஆபத்தான வளைவுகள் என நெடு ஞ்சாலை துறையினரால் கண்டறிய ப்பட்ட இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த குவிய கண்ணாடிகளை வனவில ங்குகள் முற்றிலுமாக சேதப்படுத்தியது.

    மேலும் ஒகேனக்கல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆபத்தான மற்றும் குறுகிய நிலையிலான வளைவுகள் உள்ளதால் ஏற்பட்டுள்ளது.

    இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்போது ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கணவாய் பகுதியில் இடைவிடாது வாகனங்கள் சென்றவாறு உள்ளதால் குறுகிய வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே ஒகேனக்கல் கணவாய் சாலையில் ஆபத்தான இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ள தடுப்புகளை சரி செய்தும் மற்றும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் குறுகிய வளைவுகளில் குவிய கண்ணாடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நெடுஞ் சாலைத்துறையினருக்கு சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 638 மனுக்கள் வரப்பெற்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 638 மனுக்கள் வரப்பெற்றன.

    இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட கலெக்டர் சாந்தி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு வழங்குகின்ற எந்த சலுகையாக இருந்தாலும், சிட்டா, அடங்கள் இல்லாததால் பெற முடிவதில்லை.
    • இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் கூட வழங்கப்பட வில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சக்கிலிநத்தம் கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த 350-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

    ஆனால் இங்குள்ள மக்களுக்கு இதுவரை அரசு வழங்குகின்ற எந்த சலுகைகளும் எட்டப்படுவதில்லை. மேலும் மூன்று தலைமுறையாக அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசுக்கு சொந்தமான நிலங்களும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    இதனால் அரசின் மூலம் வழங்கப்படுகின்ற சலுகை களைப் பெற சிட்டா, அடங்கள் தர வேண்டும் என்பதால், பட்டா இல்லாத இடங்களுக்கு வருவாய் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.

    மேலும் சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்கின்ற இடத்திற்கு தனி தனியாக பட்டா வழங்க வேண்டும்.

    விவசாய நிலங்களை அவர் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளனர். இதுவரை இந்த கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக 100 க்கு மேற்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த காலங்களில் பல்வேறு அரசு அதிகாரிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அரசு வழங்குகின்ற எந்த சலுகையாக இருந்தாலும், சிட்டா, அடங்கள் இல்லாததால் பெற முடிவதில்லை. மேலும் இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் கூட வழங்கப்பட வில்லை.

    இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 5 மாதத்திற்கு முன்பே மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, தற்போது மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

    அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ப்போவதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் வீடுகளில் கருப்பு கொடி யேற்றி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என கிராமமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    • மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை.
    • உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை எனக் கூறி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக புது வாழ்வு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் இருக்கும் கழிவறைகளை தினமும் தூய்மை பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மாவட்டம் முழுவதும் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்தனர்.

    அதன்பின் இப்பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் மாதம், மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் இரண்டு வருட சம்பளம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் தூய்மை பணி செய்யும் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    அதனால் தாங்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்காடிக்கு நேற்று 3,863 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
    • ரூ.14 லட்சத்து 9ஆயிரத்து 426-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு க்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று 3,863 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.475-க்கும், குறைந்தபட்சமாக ரூ.254-க்கும், சராசரியாக ரூ.364.77-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 9ஆயிரத்து 426-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பிக்கம்பட்டி அருகே உள்ள திப்பட்டி பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணாமணி (வயது 59 ).

    இவர் வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று கண்ணாமணி வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் கண்ணாமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×