டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், காஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-05-16 22:48 GMT   |   Update On 2023-05-16 22:48 GMT
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதேபோல, மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், செர்பியாவின் லாஸ்லோ ஜெரியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட்

6-1, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Tags:    

Similar News