டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்

Published On 2023-09-09 23:01 GMT   |   Update On 2023-09-09 23:01 GMT
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
  • இந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வென்றார்.

நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News