தொழில்நுட்பச் செய்திகள்
ஐகூ நியோ6 5ஜி

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட புது ஐகூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2022-05-23 04:23 GMT   |   Update On 2022-05-23 04:23 GMT
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.


ஐகூ நிறுவனம் நியோ6 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை கடந்த ஒரு வார காலமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஐகூ நியோ6 5ஜி மாடல் இந்தியாவில் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஐகூ அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசர் அமேசான் இந்தியா வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஐகூ நியோ6 5ஜி மாடல் டிசைன், நிற ஆப்ஷன்கள் மற்றும் கேமரா லே-அவுட் விவரங்களை தெரிவிக்கும் டீசரை ஐகூ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. எனினும், ஐகூ நியோ6 இந்திய வேரியண்ட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஐகூ நியோ6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 12GB ரேம், 256GB மெமரி கொண்டிருக்கிறது.



வரும் நாட்களில் புதிய ஐகூ நியோ6 5ஜி மாடல் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படலாம். ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ6 SE ஸ்மார்ட்போனின் ரி பிராண்டு செய்யப்பட்ட மாடல் தான் இந்தியாவில் ஐகூ நியோ6 5ஜி பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சீன வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஐகூ நியோ6 5ஜி மாடலில் மேம்பட்ட UFS 3.1 ஸ்டோரேஜ், கேஸ்கேட் கூலிங் சிஸ்டம், 4D கேம் வைப்ரேஷன் மற்றும் லீனியர் மோட்டார் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ6 5ஜி மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News