தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

குறைந்த விலையில் புது வெர்ஷன் - இணையத்தில் லீக் ஆன ஆப்பிள் ரகசிய திட்டம்

Published On 2022-05-16 05:10 GMT   |   Update On 2022-05-16 05:10 GMT
ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டி.வி. சாதனத்தின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நிறுவன மாடல்களை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் டி.வி. மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ஹார்டுவேர், தரவுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் திட்டம் காரணமாக போட்டியாளர்களை எதிர்கொள்ள நிலவும் இடைவெளியை போக்க வழி செய்யும் என ஆப்பிள் வல்லுனராக அறியப்படும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார். தற்போது ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 



ஆப்பிள் டி.வி. 4K மாடல் 32GB மற்றும் 64GB வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 179 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 870 மற்றும் 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 419 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஹோம் தியேட்டர் இன்ஸ்டால் செய்வோர் மத்தியில் தலைசிறந்த மாடலாக விளங்குகிறது. மேலும் இதில் உள்ள எகெஸ்டண்டட் டிஸ்ப்ளே ஐடெடிபிகேஷன் டேட்டா (EDID) போன்ற அம்சம் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும்.

EDID அம்சம் செட்-டாப் பாக்ஸ் அல்லது புளூ-ரே பிளேயர் மற்றும் இதர சாதனங்களை எதுபோன்ற டிஸ்ப்ளே பிளக்-இன் செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறியும். ஆப்பிள் டி.வி. HD மாடலிலும் EDID அம்சம் வழங்கப்பட்டு இருந்தாலும், இது 4K மாடலில் உள்ள சில அம்சங்களை செயல்படுத்த திணறும். 
Tags:    

Similar News