தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் நார்டு 2T

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது நார்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Update: 2022-05-14 04:14 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2T ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2T ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2T விவரங்கள் மற்றும் ரெண்டர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் சாதனங்களையும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய நார்டு 2T மாடல் ஃபிளாக்‌ஷிப் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் அறிமுகம் செய்து இருக்கும் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 80W சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒன்பிளஸ் நார்டு 2T எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.43 இன்ச் FHD+ ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், OIS
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மோனோ கேமரா
- 32MP செல்பி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz) 2X2 MIMO, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் 

புதிய ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 635 என துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடும் இதே தினத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News