தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நார்சோ 50A பிரைம்

ரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் புது நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-04-26 05:25 GMT   |   Update On 2022-04-26 05:25 GMT
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.


ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 128GB UFS 2.2 மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் ரியல்மி U1 R எடிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க நார்சோ 50A பிரைம் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.



ரியல்மி நார்சோ 50A பிரைம் அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
- மாலி G57 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB / 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
- டூயல் சிம் ஸ்லாட் 
- 50MP பிரைமரி கேமரா, f/1.8 
- 2MP மேக்ரோ கேமரா
- வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும்  பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் 4GB + 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என துவங்குகிறது.

Tags:    

Similar News